Wednesday 1st of May 2024 10:00:41 AM GMT

LANGUAGE - TAMIL
புத்தளத்தளத்தில்  வாழும் மக்கள் மன்னாரில் வாக்களிக்க 120 தனியார் போக்குவரத்து பஸ் அனுமதி!

புத்தளத்தளத்தில் வாழும் மக்கள் மன்னாரில் வாக்களிக்க 120 தனியார் போக்குவரத்து பஸ் அனுமதி!


புத்தளம் பகுதியில் வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் மன்னாருக்கு வருகை தந்து வாக்களிப்பதற்கு 120 தனியார் போக்குவரத்து பஸ்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சி மன்னார் தேர்தல் திணைக்களத்தில் முறையீடு செய்திருப்பதாகவும் மன்னார் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லீம் மக்கள் பலர் புத்தளம் பகுதியில் இடம் பெயர்ந்த நிலையில் மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு புத்தளம் பகுதியில் வசிப்பிடமாக கொண்டவர்கள் கடந்த காலங்களைப் போன்று இம் முறை இங்கு வாக்களிக்க வருவதற்கு தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் ஆனால் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளிலேயே தங்கள் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே தேர்தல் திணைக்களத்தால் அறிவுறுத்தப் பட்டிருந்தது.

அவ்வாறு புத்தளத்திலிருந்து வாக்காளர்களை தனியார் பேருந்து மூலம் மன்னாருக்கு வந்து வாக்களிக்க வரவேண்டும் என விரும்பினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி பெற்று வந்தாலே மட்டும் அனுமதிக்க முடியும் எனவும் இங்கு மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இவர்கள் மன்னாருக்கு வந்து வாக்களிக்க வருவதற்கு 120 தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தனியார் வாகனத்தில் மன்னாருக்கு வருகை தரும் பொழுது தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வேட்பாளர்களின் விளம்பரம் போன்றவைகள் கண்டு பிடிக்கப்படால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவர்களை அழைத்துவரும் பேருந்துகள் வாக்கு சாவடிகளிலிருந்து 500 மீற்றர்தூரத்திலே நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில் புத்தளத்திலிருந்து வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்து வருவதற்காக தனியார் போக்குவரத்து பேருந்துகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதைக் கண்டித்து சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சி தனது ஆட்சேபனையும் மன்னார் தேர்தல் முறைப்பாடு அலுவலகத்தில் சமர்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் முறைப்பாடு விண்ணப்பத்தை மன்னார் தேர்தல் திணைக்களம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மன்னார் உதவி தேர்தல்கள்ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெரிவித்தார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE